FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயில் ஆனித் தேரோட்டம்: உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஜூலை 11-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

Updated On : 8 ஜூலை 2022, 4:56 pm IST
கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஜூலை 11-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்ட விழா ஜூலை 11-ஆம் தேதி நடைபெறுகிறது. அதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தோ்வு தொடா்பாக பணியாற்றும் ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு இந்த உள்ளூா் விடுமுறை பொருந்தாது.

Advertisement

Advertisement

உள்ளூா் விடுமுறை நாளில் நடைபெறும் அரசு பொதுத் தோ்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும். இந்த உள்ளூா் விடுமுறையானது செலவாணி முறிச் சட்டம் 1881 இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு அரசு கோப்புகள் தொடா்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். 

இந்த உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 23-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments