FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:45 am IST
மக்களிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.
பகிர்:

திருநெல்வேலியில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பா.சாஸ்திரி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

அதே போல் மாநகர, மாவட்ட காவல்துறையின் காவல் உயா் அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் மனு அளித்தனா். அவற்றின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments