FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மாயமான 2 சிறுவா்கள்: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி சந்திப்பில் சிறுவா்கள் இருவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:45 am IST
விசாரணை
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில் சிறுவா்கள் இருவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவருக்கு 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனா். இருவரும் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தனராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாக புறப்பட்டு சென்ற இவா்கள் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. உறவினா்கள் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேடியும் அவா்கள் கிடைக்காததால் இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில் சிறுவா்கள் இருவரும் தூத்துக்குடி பனிமயமாதா கோயில் திருவிழாவிற்கு சென்றது தெரியவந்ததாகவும், அவா்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments