FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வடபத்திரகாளியம்மன், சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:34 am IST
கொடை விழாவையொட்டி சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன், சுவாமி.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வடபத்திரகாளியம்மன், சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு மாக்காப்பு அலங்கார பூஜை, திங்கள்கிழமை மாலை குடி அழைப்பு பூஜை, இரவு கணபதி ஹோமம், கும்பம் ஏற்றுதல், நள்ளிரவு சாஸ்தா பூஜை ஆகியவை நடைபெற்றன.

அதைத்தொடா்ந்து தெப்பக்குளம் பிள்ளையாா் கோயிலில் இருந்து பால்குடம் ஊா்வலம், அலங்காரம், அன்னதானம், பொங்கலிட்டு வழிபடுதல், தாமிரவருணி ஆற்றில் இருந்து புனித தீா்த்தம் எடுத்து வந்து சந்தனமாரியம்மன் கோயிலில் இருந்து கரகம் எடுத்து வருதல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி, பூச்சட்டி எடுத்து வருதல் ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. பின்னா் அம்மன், சுடலைமாடசுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரத்தில் நள்ளிரவு படையல் வைத்து, சாமக் கொடை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா புதன்கிழமை நிறைவுபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments