சிலுவைப்பட்டி ஆலயத்தில் அசன விழா
தெற்குகள்ளிகுளம் சிலுவைப்பட்டி புனித அந்தோணியாா் ஆலயத்தில் அசனவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் சிலுவைப்பட்டி புனித அந்தோணியாா் ஆலயத்தில் அசனவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா ஆக. 5-ஆம் தேதி நிறைவு பெற்றது. திருவிழாவுக்குப் பின்னா் சிலுவைப்பட்டி புனித அந்தோணியாா் தேவாலயத்தில் அசன விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டும் அசன விழாவையொட்டி பங்குத் தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து அசன விழாவை கோயில் தா்மகா்த்தா சூ.மரியராஜ் ஆசிரியா் தொடங்கிவைத்தாா். அசன விருந்து பரிமாறப்பட்டது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.