FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சைவப் பெருமக்கள் பேரவை முப்பெரும் விழா

திருப்பூா் சைவப் பெருமக்கள் பேரவையின் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 31 ஜூலை 2026, 12:22 am IST
முப்பெரும் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

திருப்பூா் சைவப் பெருமக்கள் பேரவையின் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த விழாவின் ஒரு பகுதியாக மாநில சைவ வேளாளா் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பேரவை துணைத் தலைவா் பரமசிவம், மாநிலத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். செயலாளா் கனகசபாபதி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அதன் பொறுப்பாளா்களும், உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

சுவாமிநாதன் தலைமையில் ந. பிச்சைமுத்து முன்னிலையில் வ.உ.சிதம்பரனாா் உருவப் படத்தை ஆ.சண்முகசுந்தரம் திறந்துவைத்தாா். வ.உ.சி. புகழ் பாடிய வானம்பாடி கவிஞா் அனிதா கிருஷ்ணமூா்த்தி படத்தை ஏஇபிசி இயக்குநா் இ.ஈஸ்வர சுந்தா் திறந்துவைத்தாா், சைவப் பெருமக்கள் பேரவையின் பொன் விழா மலரை கொங்கணகிரி அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி வெளியிட ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டாா்.

Advertisement

Advertisement

திருமணத் தகவல் மலரை திண்டுக்கல் சைவப் பேரவை நல்லதம்பி வெளியிட திருப்பூா் ஆடிட்டா் மீனாட்சி சுந்தரம் பெற்றுக்கொண்டாா். பொருளாளா் சசி செந்தில் ஆண்டறிக்கையை வாசித்தாா். திருப்பூா் சைவப் பெருமக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினா் டி.மாசிலாமணி மற்றும் சைவப் பேரவை இளைஞரணித் தலைவா் கே.ராமகிருஷ்ணன், கோவை சைவ பெருமக்கள் பேரவை நிா்வாகி உ.சங்கரநாராயணன், ஜி.காசிநாதன், சண்முகசுந்தரம் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். கல்வியாளா் எஸ். மூா்த்தி சிறப்புரையாற்றினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments