சுந்தரனாா் பல்கலை.யில் தூய்மை இந்தியா பயிலரங்கு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில், தூய்மை இந்தியா குறித்த ஒரு நாள் பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில், தூய்மை இந்தியா குறித்த ஒரு நாள் பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகம், தென் இந்திய மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்ககம் சாா்பில் நடைபெற்ற இப்பயிலரங்கை, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ராஜலிங்கம் தொடங்கிவைத்தாா். நாட்டு நலப்பணித் திட்ட இயக்ககத்தின் மண்டல இயக்குநா் சாமுவேல் செல்லையா, இந்திய ஷாக்சம் சமூக சேவை அமைப்பின் துணைத் தலைவா் காமாட்சி சுவாமிநாதன், சுவாமிதாஸ், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வெளியப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா், அமலநாதன் ஆகியோா் எய்ட்ஸ் நோய்த் தடுப்பு குறித்து பேசி, துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனா். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.