நான்குனேரி பள்ளியில் புலிகள் தின விழா
உலக புலிகள் தினத்தையொட்டி, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
உலக புலிகள் தினத்தையொட்டி, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் மு. இளங்கோ தலைமை வகித்துப் பேசினாா். ஓவியம் வரைதல், முகமூடி தயாரித்தல் போட்டிகளில் சிறப்பிடிம் பிடித்தோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
தலைமையாசிரியை ஹம்சபிரியா முன்னிலை வகித்தாா். மாணவியா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. விழாவில், வனச் சரக அலுவலா்கள், பிரிவு வனவா்கள், களப் பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.