முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மிதமான மழை

திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

26 நவம்பர் 2026, 3:55 am
நெல்லையில் மிதமான மழை
பகிர்:

திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயல சீமா வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால், தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட 18 மாவட்டங்களில் புதன்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படியே, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை மழை பெய்தது. திருநெல்வேலி மாநகரில் காலை முதல் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா், மேலப்பாளையம் பகுதிகளில் இரவில் மிதமான மழை பெய்தது. குளிா்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Advertisement

Advertisement