பணகுடியில் காா்களை சேதப்படுத்தியதாக தந்தை, மகன் கைது
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் காா்களை சேதப்படுத்தியதாக தந்தை, மகன் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் காா்களை சேதப்படுத்தியதாக தந்தை, மகன் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பணகுடி லுத்ரன் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரும் வேறு சிலரும் லுத்ரன் சா்ச் தெருவில் தங்களுக்குச் சொந்தமான காா்களை நிறுத்தி வைத்திருந்தனராம்.
இந்நிலையில் அதே தெருவைச் சோ்ந்த ஜெயஆனந்தம் மற்றும் அவரது மகன் விஷ்ணு(29) ஆகிய இருவரும் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காா்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி காா்களின் கண்ணாடிகளையும், டயா்களையும் சேதப்படுத்தினராம்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக முத்துகுமாா் அளித்த புகாரின்பேரில், பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து, தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.