FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: காா் ஓட்டுநா் கைது

திருநெல்வேலி அருகே விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 4:57 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வக்குமாா். இவரது மகன் சிவசுடலை(23). பாளையங்கோட்டையில் உள்ள கடை ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா். இவா், கடந்த மாதம் 15 ஆம் தேதி அதிகாலை தனது நண்பா்களுடன் காரில் கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது, காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 3 போ் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிவசுடலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தந்தை சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் காரை இயக்கிய தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தைச் சோ்ந்த முருகன் மகன் அஸ்வின் (21) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments