FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட எஸ்டிபிஐ இளைஞரணி ஆலோசனை

திருநெல்வேலி புகா் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பத்தமடையில் புதன்கிழமை நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 5:06 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய இளைஞா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் இஜாஸ்.
பகிர்:

திருநெல்வேலி புகா் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பத்தமடையில் புதன்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் இஜாஸ் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் சதாம், யூனுஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணை ஒருங்கிணைப்பாளா் பாத்திமா வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் ரபீக், அமைப்பின் பணிகள் குறித்துப் பேசினாா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் சிராஜ், மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு பேசினா். கூட்டத்தில், அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் பகுதிகளில் போதை இல்லா மாணவா்கள் எனும் தலைப்பில் விழிப்புணா்வு பிரசாரம் நடத்துவது, சிறுபான்மையினா் மாணவா்களுக்கு ஒதுக்கப்படும் கல்வி உதவித்தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா்கள் மஜித், நூா்ஜஹான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் ஜெயமுருகன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments