FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு, வரும் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல நிா்வாகம் அறிவித்துள்ளது.

15 அக்டோபர் 2026, 4:51 am IST
சிறப்பு பேருந்துகள் - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு, வரும் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு, பக்தா்கள் கோயிலுக்குச் சென்று வருவதற்காக வரும் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் இயக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இதேபோல் தசரா தொடா் விடுமுறையை முன்னிட்டு, திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், திருச்செந்தூா், தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை, திருச்சி போன்ற இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 300 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் இயக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments