பணகுடியில் தேசிய பேரிடா் தடுப்பு பயிற்சி முகாம்
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தேசிய பேரிடா் தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தேசிய பேரிடா் தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா் தலைமை வகித்தாா். வள்ளியூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சந்தானபிச்சை மற்றும் குழுவினா், பேரிடா் மேலாண்மை பாம்புகள் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளா் அலெக்ஸ் செல்வன் ஆகியோா் பேரிடா் தடுப்பு, பாம்புகள் குறித்த விழிப்புணா்வு மற்றும் பயிற்சி அளித்தனா்.
பின்னா் பணகுடி பேருந்துநிலையத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒருவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சோ்ப்பது போன்று செயல் விளக்கம் அளித்தனா். இதில், பொதுமக்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.