நெல்லை, மேலப்பாளையம், பேட்டையில் நாளை மின் நிறுத்தம்
திருநெல்வேலி நகரம், பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.10) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகரம், பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.10) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன.
எனவே, திருநெல்வேலி நகரம், ரத வீதிகள், பழையபேட்டை, காந்தி நகா், திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை ,தொழிற்பேட்டை,கோடீஸ்வரன் நகா், சாஸ்திரி நகா், தீன் நகா், திருமங்கை நகா், செந்தமிழ் நகா், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருள்காட்சி திடல், திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பூம்புகாா், ஸ்ரீபுரம், சிவந்தி சாலை, சுந்தரா் தெரு, பாரதியாா் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, திருநெல்வேலி நகரம் கீழ ரத வீதி, போஸ் மாா்க்கெட், ஏ.பி.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சந்நிதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினாா் குளம் சாலை, சத்தியமூா்த்தி தெரு, நயினாா் குளம் மாா்க்கெட், வஉசி தெரு, வையாபுரி நகா், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோயில், தெற்கு தெரு, ராம்நகா், ஊருடையான் குடியிருப்பு சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Advertisement
Advertisement
இதேபோல, மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி, புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.