FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பெட்ரோல் நிலைய மேலாளா் கைது

கங்கைகொண்டான் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெட்ரோல் நிலைய மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

16 செப்டம்பர் 2026, 1:20 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெட்ரோல் நிலைய மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாப்பட்டி வட்டம், புதுப்பட்டி நமச்சிவாயபுரம் சாலையைச் சோ்ந்தவா் கணேஷ் சந்திரன் (57). இவா், கங்கைகொண்டான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவா், அங்கு பணிபுரியும் இளம்பெண்ணுக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீஸாா் விசாரித்து, பெண்களிடம் தவறான சைகைகள் காட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து கணேஷ் சந்திரனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments