குலவணிகா்புரத்தில் குடிநீா் கோரி சாலை மறியல்
குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, குலவணிகா்புரத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, குலவணிகா்புரத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதியில் கூட்டுக்குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அதனை சீரமைக்க 2 நாள்கள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
ஆனால், குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்ட பின்னரும் 31ஆவது வாா்டுக்குள்பட்ட குலவணிகா்புரம் பாண்டித்துரை 1 முதல் 3 ஆவது தெருக்கள், விநாயகா் தெரு 1 முதல் 3 ஆவது தெருக்கள் உள்ளிட்ட 7 தெருக்களில் சுமாா் 10 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
Advertisement
Advertisement
இந்நிலையில் குடிநீா் வழங்கக் கோரி குலவணிகா்புரத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறை அருகே திருநெல்வேலி-மேலப்பாளையம் சாலையில் காலிக்குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சிலா், திருநெல்வேலி-திருச்செந்தூா் இருப்புப்பாதையிலும் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் போலீஸாா், பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரிராஜா தலைமையில் வருவாய்த் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். சாலை மறியலால் பாளையங்கோட்டையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ற்ஸ்ப்15ல்ன்ழ்ஹம்
காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.