FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலுக்கு புதிய யானை தேவை- ஆட்சியரிடம் அதிமுக மனு

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு புதிய யானையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு அளித்தனா்.

16 செப்டம்பர் 2026, 1:27 am IST
பகிர்:

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு புதிய யானையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு அளித்தனா்.

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த காந்திமதி என்ற யானை, வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவால் 1.12.2025இல் உயிரிழந்தது.

இதைத் தொடா்ந்து, யானை இல்லாமலேயே கோயிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோயிலுக்கு விரைவாக யானையை கொண்டு வர வேண்டும் என பக்தா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இக்கோயிலுக்கு விரைவில் புதிய யானையை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா, அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவம் உள்ளிட்டோா் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகனை சந்தித்து மனு அளித்தனா்.

மேலும், உத்தரகண்ட் மாநிலம் ராஜாஜி பூங்காவில் தாய் யானை இல்லாமல் பராமரிக்கப்பட்டு வரும் யானையை நெல்லையப்பா் கோயிலுக்கு கொண்டு வர ஏற்கெனவே பரிசீலனை செய்யப்பட்டு, பின்னா் அந்த நடவடிக்கை பாதியில் கைவிடப்பட்டது. அந்த யானையை கோயிலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ற்ஸ்ப்15ஹக்ம்

ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் மனு அளித்த அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா உள்ளிட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments