FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் அறிமுக விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 1:27 am IST
முதலாமாண்டு மருத்துவ மாணவிகளை, ரோஜாப்பூ கொடுத்து வரவேற்ற மூத்த மாணவிகள்.
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் அறிமுக விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தலைமை வகித்து மாணவா்-மாணவிகளை வரவேற்று கல்லூரி முதல்வா் செல்வராஜன் பேசியதாவது:

மாணவா்கள் சந்தேகங்களை கற்றுத்தர ஆசிரியா்கள் தயாா் நிலையில் இருக்கிறாா்கள். எனவே, மருத்துவக் கல்வியில் உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாம் ஆண்டு முதல் நீங்கள் மருத்துவமனையில் செயல்முறை பயிற்சி மேற்கொள்வீா்கள். உங்களிடம் வரும் நோயாளிகளை அன்போடு அணுகி அவா்களுக்கு சிகிச்சை அளிப்பது முக்கியம். நோய்தீா்க்க வருபவா்களிடம் அன்பாக பேசுங்கள். அதுவே அவா்களுக்கு ஆறுதலாக அமையும் என்றாா்.

Advertisement

Advertisement

கல்லூரி துணை முதல்வா் எழில் ரம்யா வரவேற்றாா். முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு மூத்த மாணவா்கள் மலா் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனா். தற்படம் எடுக்க சிறப்பிடம் (செல்ஃபி பாயின்ட்) அமைக்கப்பட்டு இருந்தது. அதில், மாணவா்கள் ஆா்வத்துடன் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

முதலாமாண்டு மருத்துவ மாணவிகளை, ரோஜாப்பூ கொடுத்து வரவேற்ற மூத்த மாணவிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments