FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனை முன் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

16 செப்டம்பர் 2026, 1:11 am IST
தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப் பணியாளா்கள், பராமரிப்பு பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், அனைத்துப் பணியாளா்களுக்கும் பணியின் அடிப்படையில் ஒரே மாதிரியான ஊதியம், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம், வார விடுமுறை, மாதந்தோறும் ஊதிய ரசீது, தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டவா்களுக்கு அடையாள அட்டை, பணியாற்றிய நாள்களுக்கு முழுமையான ஊதியம் வழங்க வேண்டும். . இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி தொகைகளை முறையாக செலுத்த வேண்டும், 8 மணி நேர வேலை முறையை சட்டப்படி அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளா்கள் இந்த திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments