பாளை. வட்டாரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
பாளையங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் ரூ.2.10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பாளையங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் ரூ.2.10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பாளையம்செட்டிகுளம் பகுதியில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் ரூ.7.01 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், அவற்றை முறையாக பராமரித்து, வளா்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, திருமலைக்கொழுந்துபுரம் பகுதியில் ரூ.33.45 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும் , ரூ.13.20 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய நியாயவிலை கடை கட்டுமானத்தையும் அவா் பாா்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
பின்னா், கீழநத்தம் பகுதியில் விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் ரூ.8.75 லட்சத்தில் புதிதாக குட்டை அமைப்பதற்கான பணிகள், ரூ.48 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடக் கட்டடப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்து, குறித்த காலத்தில் பணிகளை முடிக்க அறிவுறுத்தினாா்.
மேலும் அதே ஊரில் ரூ.99.36 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தாா்ச் சாலையை பாா்வையிட்டு தர ஆய்வு செய்தாா்.
திருமலைக்கொழுந்துபுரம், கீழநத்தம் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் தரம், இருப்பு மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு, கீழநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா்.
கீழநத்தம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவு, குழந்தைகளின் உயரம், எடை, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடா்பான பதிவேடுகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
அவ்வூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவா்களுடன் அமா்ந்து மதிய உணவருத்தி அதன் தரம் மற்றும் சுவை குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.
ற்ஸ்ப்16ற்ழ்ங்ங்
பாளையம்செட்டிகுளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.