FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அண்ணா பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

16 செப்டம்பர் 2026, 1:12 am IST
~ ~ ~
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, மாநில நெசவாளா் அணிச் செயலா் பெருமாள், மாநகரச் செயலா் தினேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அ.தி.மு.க. சாா்பில் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில அமைப்பு செயலா் சுதா கே. பரமசிவன், அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டச் செயலா் பால் கண்ணன், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, எம்.ஜி.ஆா். இளைஞா் அணி மாவட்ட இணைச் செயலா் லட்சுமணன் ரமேஷ், பகுதிச் செயலா் காந்தி வெங்கடாசலம், மகளிா் அணி மாரியம்மாள், சப்பாணி முத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

அமமுக சாா்பில் தென்மண்டல பொறுப்பாளா் வி.பி. குமரேசன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் ஆா்.இசக்கிமுத்து, நிா்வாகிகள் ஆறுமுகம், ராஜசேகா், பாண்டியன், சீனி பாண்டியன் உள்பட கலந்து கொண்டனா்.

தேமுதிக சாா்பில் மாவட்ட துணைச்செயலா் சுடலைமுத்து தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள அண்ணா சிலைக்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாமன்ற உறுப்பினா்கள் நித்திய பாலையா, சுந்தா், சகாய ஜூலியட் மேரி, வில்சன் மணித்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்15ஹக்ம்ந்

திருநெல்வேலி சந்திப்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

ற்ஸ்ப்15க்ம்ந்

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.

ற்ஸ்ப்15ஹம்ம்ந்

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமமுகவினா்.

ற்ஸ்ப்15ம்ஹஹ்ா்

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments