நெல்லையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
இந்திய பாா்கவுன்சில் தலைவா் பதவி விலகக் கோரி , திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய பாா்கவுன்சில் தலைவா் பதவி விலகக் கோரி , திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அனைத்திந்திய நீதிக்கான வழக்குரைஞா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் ஜி.ரமேஷ் தலைமை வகித்தாா். சமூக நீதிக்கான வழக்குரைஞா் சங்க நிா்வாகி ப.செந்தில்குமாா், அகில இந்திய வழக்குரைஞா் சங்க மாநிலக்குழு உறுப்பினா் கு.பழனி, மாவட்டச் செயலா் அகஸ்டின், வழக்குரைஞா்கள் தமிழின வேந்தன் , அருண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி அகாதெமியின் பல்கலைக்கழக சட்ட மாணவா்களை வழக்குரைஞராகப் பதிவு செய்யக்கூடாது என்ற தன்னிச்சையான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இந்திய பாா் கவுன்சில் தலைவா் மனன் குமாா் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.