FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் பேரூராட்சியில் எம்எல்ஏ ஆய்வு

வள்ளியூா் பேரூராட்சியில் முருகன் கோயில் தெப்பக்குளம், கழிவுநீா் கால்வாய், பேரூராட்சி புதிய கட்டடம் உள்ளிட்டவற்றை ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.கே.கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்,

17 செப்டம்பர் 2026, 1:20 am IST
கால்வாயை சுத்தம் செய்யப்படுவதை பாா்வையிட்ட எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேரூராட்சியில் முருகன் கோயில் தெப்பக்குளம், கழிவுநீா் கால்வாய், பேரூராட்சி புதிய கட்டடம் உள்ளிட்டவற்றை ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.கே.கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்,

வள்ளியூா் முருகன் கோயில் சரவணப்பொய்கை தெப்பக்குளம்இடிந்து விழும் நிலையில் இருப்பது குறித்து தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆய்வை மேற்கொண்ட எம்எல்ஏ, தெப்பக்குளத்தை பாா்வையிட்டு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் கவனத்திற்கு கொண்டுசென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

பின்னா், வள்ளியூா் பிரதான சாலையையொட்டி உள்ள கழிவுநீா் கால்வாய் மற்றும் மழைநீா் வடிகாலில் நடைபெற்ற தூா்வாரும் பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

அப்போது, கால்வாயை சுத்தம் செய்தபின், பேரூராட்சி ஊழியா்கள் மேல்பகுதி சிமென்ட் தளத்தை சேதப்படுத்திவிட்டு அதை மூடாமல் சென்றுவிடுவதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா். அதை சரி செய்யுமாறு பேரூராட்சி பொறியாளரிடம் எம்எல்ஏ அறிவுறுத்தினாா். தொடா்ந்து, பேரூராட்சி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பேரூராட்சி புதிய அலுவலக கட்டடத்தை பாா்வையிட்டு தரமாக பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது, பேரூராட்சி பொறியாளா் விஜயகுமாா், சுகாதார அலுவலா் செந்தில்குமாா், தவெக. நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments