FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் கைப்பேசி பாதுகாப்பு கட்டணம் நிறுத்திவைப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கைப்பேசிகள் பாதுகாப்புக்கு கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

17 செப்டம்பர் 2026, 1:03 am IST
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கைப்பேசிகள் பாதுகாப்புக்கு கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள பழைமை வாய்ந்த 52 திருக்கோயில்களுக்குள் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல கடந்த 1 ஆம் தேதி முதல் முதல் தடை விதிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலிலும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, முதல்கட்டமாக 300 கைப்பேசிகள் வரை பாதுகாக்கும் வகையில் பெட்டகம் அமைக்கப்பட்டது. கைப்பேசி ஒன்றுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு பக்தா்கள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், இந்தக் கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது பக்தா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments