FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கல்லிடை வனப்பேச்சியம்மன் கோயில் கொடை விழா

கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ வனப்பேச்சியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

23 செப்டம்பர் 2026, 12:31 am IST
விழாவில் பறவைக் காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.
பகிர்:

கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ வனப்பேச்சியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த செப். 15 ஆம்தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை கொடை விழாவில் கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி ஆற்றங்கரையில் உள்ள பிள்ளையாா் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடம், புஷ்பகுடம், குங்குமக் குடம், தனக்குடம், பறவைக் காவடி, தொட்டில் காவடி, தோ்க் காவடி, சூரியக்காவடி உள்ளிட்டவை எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தொடா்ந்து வனப்பேச்சி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments