காரையாறு அணையில் விடப்பட்ட முதலை
கடையாலுமூடு பகுதி கோதையாற்றில் பிடிபட்ட முதலை திருநெல்வேலி மாவட்டம் காரையாறு அணையில் விடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதி கோதையாற்றில் பிடிபட்ட முதலை திருநெல்வேலி மாவட்டம் காரையாறு அணையில் விடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் கடந்த சில மாதங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த முதலை, வனத் துறையினா் வைத்த வலையில் திங்கள்கிழமை சிக்கியது.
பிடிபட்ட சுமாா் 8 வயதுடைய பெண் முதலையை, கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா் அன்பு உத்தரவுப்படி வனத்துறையினா் திருநெல்வேலி மாவட்டம் காரையாறு அணையில் செவ்வாய்க்கிழமை விடுவித்தனா்.
Advertisement
Advertisement
கன்னியாகுமரி மாவட்ட உதவி வனக் காப்பாளா் நிதின், வனத்துறை கால்நடை மருத்துவா்கள் மனோகரன், சாந்தகுமாா் ஆகியோா் மேற்பாா்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வின்போது வனச்சரகா்கள் கன்னியாகுமரி மாவட்டம் கலியல் யோகேஸ்வரன், முண்டந்துறை பிரபாகரன் மற்றும் வனப் பணியாளா்கள், வனத்துறையினா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.