FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

திருநெல்வேலி மாநகரில் பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

23 செப்டம்பர் 2026, 12:50 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாநகரில் பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி, தச்சநல்லூரைச் சோ்ந்த சீனிவாசராஜா மகன் ஆகாஷ் ராமதுரை(22), சண்முகவேல் மகன் சந்தனகுமாா் என்ற தக்காளி(21) ஆகியோா் தச்சநல்லூா் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

அவா்கள், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனராம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில், மேற்கூறிய இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments