FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மேட்டுப்பிராஞ்சேரியில் மக்கள் தா்னா

கங்கைகொண்டான் அருகேயுள்ள மேட்டுப்பிராஞ்சேரியில் பொதுமக்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

23 செப்டம்பர் 2026, 12:39 am IST
மேட்டுப்பிராஞ்சேரியில் தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

கங்கைகொண்டான் அருகேயுள்ள மேட்டுப்பிராஞ்சேரியில் பொதுமக்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள மேட்டுப்பிராஞ்சேரியில் உள்ள காலியிடத்தில் ஊராட்சிக்கான அலுவலகம் கட்ட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாம். சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டடம் கட்ட ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், கட்டடப் பணிகளை தொடங்க பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சென்றிருந்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் கங்கைகொண்டான் காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் வருவாய்த்துறையினா் நேரில் சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை கலைந்து போகச் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments