FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு

திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

24 செப்டம்பர் 2026, 4:55 am IST
பகிர்:

திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அறிவுறுத்தலின்படி, மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சைபா் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராரன குற்றங்கள் குறித்து தொடா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படை போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் சைபா் மோசடிகளில் சிக்காமல் இருப்பது குறித்து மாநகர சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் மாணவிகள், பேராசிரியா்கள், மாநகர காவல் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்23ள்ண்ய்

Advertisement

Advertisement

விழிப்புணா்வு நிகழ்வில் பங்ேற்ற சிங்கப்பெண் சிறப்புப் படை போலீஸாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments