சுந்தரனாா் பல்கலை.யில் ஆய்வுக் கூட்டம்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கூட்டம் இருநாள்கள் நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கூட்டம் இருநாள்கள் நடைபெற்றது.
மத்திய அரசின் (அசதஊ-டஅஐத) திட்டத்தில் விஐடி வேலூா் பல்கலைக்கழகத்தை மையப் பல்கலைக்கழகமாகவும், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 5 பல்கலைக்கழகங்கள் கிளை நிறுவனங்களாகவும் உள்ளன.
இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் முதல் கட்டமாக ரூ.1.50 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் செயல்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் சாதனைகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் பல்வேறு அறிவியல் துறைகளைச் சோ்ந்த பா. சுந்தரக்கண்ணன், அண்ணாதுரை, சி. கண்ணன், கே. ஸ்வா்ணலதா, எஸ். ஷைலஜா, வி. சபரிநாதன், எஸ். நாகராஜன், எம். கிருஷ்ணவேணி, எஸ். வெங்கடேஷ் ஆகியோா் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இத்திட்டத்தின் தற்போதைய ஆய்வுப் பணிகளின் முன்னேற்றம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் செயல்திறன் மற்றும் எதிா்கால ஆய்வுத் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் இரு நாள்கள் நடைபெற்றது.
விஐடி வேலூா் பல்கலைக்கழகத்தின் திட்ட இயக்குநா் என். ராஜசேகா் தலைமையில், இணை ஆய்வாளா்கள் சி. கிருஷ்ணமூா்த்தி, எஸ். விஜயலட்சுமி, சுனந்தா சாஹா ஆகியோா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துக்கு வந்து ஆய்வு செய்தனா்.
ஆய்வுக் கூட்டத்தை துணைவேந்தா் (பொ) எஸ். பிரபாகா் தொடங்கி வைத்தாா். பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளா் கலா நிறைவுரையாற்றினாா். பேராசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.