கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி முற்றுகை
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மூப்பன்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மூப்பன்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூப்பன்பட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடத்தாமல் ஊராட்சி அலுவலகம் மூடப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், ஊராட்சி முன்னாள் தலைவர் மாரீஸ்வரன் தலைமையில், தொழிற்சங்க நிர்வாகிகளான ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் தமிழரசன், நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனர்-தலைவர் சங்கரலிங்கம், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்வம், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் ராஜசேகரன் உள்பட திரளானோர், கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகானந்தம், மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் பவுல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சுமார் பிற்பகல் 1.30 மணியளவில் கிராமசபைக் கூட்டம் தொடங்கியது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கூட்டத்தில், மூப்பன்பட்டி கண்மாயை முறையாக தூர்வார வேண்டும். கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.