FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து,  தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ்குமார் தலைமை வகித்தார்.
கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ். டேனியல்ராஜ், மாநகர முன்னாள் செயலர் அருள், முன்னாள் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கந்தசாமி, செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments