திருச்செந்தூரில் மாணவர்களுக்கு நல உதவிகள் அளிப்பு
சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளையொட்டி, திருச்செந்தூரில் மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளையொட்டி, திருச்செந்தூரில் மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞர் அணித் தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் மகாலிங்கம், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த 13 பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், தூத்துக்குடியில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும், மருத்துவர் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் 5 சதவீதம் வழங்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச வீட்டுமனை கேட்டு மருத்துவர் சமுதாய மக்கள் கொடுத்துள்ள மனுக்களின் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பரமன்குறிச்சி அபர்ணா மெட்ரிக் பள்ளித் தாளாளர் ராஜ்குமார் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கோயில்மணி, மாவட்டச் செயலர் விஜயகுமார், மாவட்டப் பொருளாளர் பாண்டியன், தூத்துக்குடி மாநகரத் தலைவர் கிருஷ்ணன், திருச்செந்தூர் நகரத் தலைவர் மான்சிங், செயலர் இலங்கேஸ்வரன், வனேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணிச் செயலர் பகவத்சிங் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமணி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.