தென்னிந்திய யோகா போட்டி: தண்டுபத்து அனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி சாம்பியன்
ஆத்தூரில் நடைபெற்ற முதலாவது தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில் தண்டுபத்து அனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாம்பியன் ஷிப் பட்டத்தை பெற்றனர்.
ஆத்தூரில் நடைபெற்ற முதலாவது தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில் தண்டுபத்து அனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாம்பியன் ஷிப் பட்டத்தை பெற்றனர்.
ஆத்தூரில் ஏகாத்மா யோக விஷ்வ வித்யாலயா அசோஷியேசன் மற்றும் இந்தியன் அசோஷியேசன் ஆப் யோகா ஆகியவை இணைந்து தென்னிந்திய அளவிலான முதலாவது யோகா போட்டியை 2 நாள்கள் நடத்தினர்.
இதில், ஆந்திரம் மற்றும் தமிழகத்திலுள்ள 12 மாவட்டங்களைச் சேர்ந்த 900 பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். இதில் சங்கரி, தனலட்சுமி, விஜஈஸ்வரி மற்றும் உதயகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி போட்டியை தொடங்கிவைத்தனர்.
போட்டியில், தண்டுபத்து அனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் முதலிலிடம் பெற்று சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றனர். ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் பள்ளி அணி 2ஆவது இடத்தையும், புன்னைக்காயல் செயின்ட் சேவியர்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி அணி 3ஆவது இடத்தையும் பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, ஆத்தூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.
விழாவில், தெலங்கானா யோகா கல்சர் அசோஷியேசன் தலைவர் கோடீஸ்வரராவ் மற்றும் டேராடூன் வனத்துறை துணைஇயக்குநர் அருண்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கேடயங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் அரிமா சங்கத் தலைவர் செல்வராஜ், ஸ்ரீதர், டாக்டர் சிவசைலவிநாயகம், பாட்சா, பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏகாத்மா அசோஷியேசன் நிர்வாகி ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.