முதல்வா் நிவாரணம்:பள்ளி மாணவி நிதியுதவி
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவி உண்டியல் மூலம் சோ்த்த பணத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்கினாா்.
ஆறுமுகனேரி: சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவி உண்டியல் மூலம் சோ்த்த பணத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்கினாா்.
ஆறுமுகனேரி ஏஐடியூசி காலனியைச் சோ்ந்த அகஸ்டின் செல்வக்குமாா் மகள் அண்ட்ரியா மிராக்ளின். சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு தனது பெற்றோா் வழங்கும் பணத்தை செலவு செய்யாமல் உண்டியலில் சோ்த்து வந்தாராம்.
இந்தப் பணத்தை கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ முடிவு செய்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து பெற்றோருக்கு தகவல் தந்து, தனது உண்டியலை எண்ணி, அதில் இருந்த ரூபாய் ஆயிரத்துக்கு வரைவோலையாக எடுத்து திருச்செந்தூா் கோட்டாட்சிரின் நோ்முக உதவியாளா் ராஜு மூலம் முதல்வா் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தாா். மாணவியை திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, கமலாவதி மேல்நிலைப் பள்ளி முதல்வா் சண்முகானந்தன், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.