FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சுப்பராயபுரம், தட்டாா்மடத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல்

சுப்பராயபுரம், தட்டாா்மடத்தில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:26 am IST
தட்டாா்மடத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டுகிறாா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ.
பகிர்:

சுப்பராயபுரம், தட்டாா்மடத்தில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

சாத்தான்குளம் ஒன்றியம், சுப்பராயபுரம், தட்டாா்மடத்தில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ. 13.50 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா அந்தந்தப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

விழாவுக்கு, ஊராட்சித் தலைவா்கள் சுயம்புதுரை, சபிதாசெல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தேவவிண்ணரசி, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, வட்டாட்சியா் லட்சுமிகணேஷ், ஒன்றிய ஆணையா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் அப்பாத்துரை வரவேற்றாா்.

எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஒன்றிய அதிமுக செயலா்கள் சவுந்திரபாண்டி, அழகேசன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments