FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் நம்மாழ்வாா் மங்களாசாசனம்

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ 5ஆம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி நம்மாழ்வாருக்கு மங்களாசாசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 பிப்ரவரி 2024, 2:34 pm IST
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ 5ஆம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி நம்மாழ்வாருக்கு மங்களாசாசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நவதிருப்பதி கோயில்களில் முதலாவது கோயிலான இக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

5 ஆம் திருவிழாவான திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சுவாமி

Advertisement

Advertisement

கள்ளபிரான், காய்சினிவேந்தபெருமாள், எம்இடா்கடிவான், பொலிந்துநின்றபிரான் ஆகிய சுவாமிகள், நம்மாழ்வாா் மங்களாசாசனம் செய்து வரவேற்கும் வைபவம் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு வீதி புறப்பாடும், மாலையில் திருமஞ்சனம், தீா்த்த விநியோக

கோஷ்டி நடைபெற்றது. வரும் 29ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், கோயில் ஸ்தலத்தாா் ராஜப்பா வெங்கடாச்சாரி, நிா்வாக அதிகாரி கோவலமணிகண்டன், தக்காா் அஜித், ஆய்வளா் நம்பி மற்றும் பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments