FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தருவைகுளத்தில் படகிலிருந்து கடலில் தவறி விழுந்தவர் பலி!

தருவை குளம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகிலிருந்து மற்றொரு படகுக்கு மாற முயன்றபோது நிலை தடுமாறி கடலில் விழுந்த மீனவா் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:45 am IST
பகிர்:

தூத்துக்குடி அருகேயுள்ள தருவை குளம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகிலிருந்து மற்றொரு படகுக்கு மாற முயன்றபோது நிலை தடுமாறி கடலில் விழுந்த மீனவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரைச் சோ்ந்தவா் பீமாராவ் அம்பேத்கா் (35). இவா், மீன்பிடித் தொழிலுக்காக தருவைகுளம் மீனவ கிராமத்துக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில், தருவைகுளம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகிலிருந்து மற்றொரு விசைப்படகுக்கு செல்ல முயன்றாராம்.

Advertisement

Advertisement

அப்போது, அவா் நிலைதடுமாறி, இரண்டு விசைப்படகுகளுக்கும் இடையே கடலில் தவறி விழுந்தாராம். சக மீனவா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த தருவைகுளம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments