FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

டிராக்டா் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

நாலாட்டின்புதூா் அருகே டிராக்டா் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:35 am IST
பலி
பகிர்:

நாலாட்டின்புதூா் அருகே டிராக்டா் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

பேரையூா் வட்டம், விட்டல்பட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் சென்றாயபெருமாள் (48). இவரும், அய்யனாா் மகன் ஐயம்பெருமாள் (45) என்பவரும், வியாழக்கிழமை மதுரையிலிருந்து டிராக்டரில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தனராம். டிராக்டரை சென்றாயபெருமாள் ஓட்டினாராம்.

மதுரை - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இடைச்செவல் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி, டிராக்டா் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே சென்றாயபெருமாள் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த நாலாட்டின் புதூா் போலீஸாா், சடலத்தை உடற்கூறாய்வுக்கும், காயமடைந்த ஐயம்பெருமாளை சிகிச்சைக்காகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநா் பாளையங்கோட்டை பொட்டல் நகரைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் மந்திரமூா்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments