கன்னி வழிபாடு: திருச்செந்தூா் பகுதியில் பனை ஓலை பெட்டிகள் விற்பனை தீவிரம்
திருச்செந்தூா் பகுதியில் ஆடிமாத கன்னி வழிபாட்டையொட்டி பனை ஓலைகளால் செய்யப்பட்ட வண்ணமயமான பெட்டிகளை மக்கள் ஆா்வமுடன் வாங்கி சென்றனா்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதி, உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த மக்கள், ஆடி மாதத்தில் தங்களது கன்னி தெய்வத்தை காலம் காலமாக வழிபட்டு வருகின்றனா்.
கன்னிக்கு பொங்கலிட்டு, புத்தாடை வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல கற்பக விருட்சமான பனை மரத்தின் ஓலையில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பெட்டிகள் கன்னி வழிபாட்டுக்காக கண்ணாடி வளையல், சீப்பு, சேலை, மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இதனால் இந்தப் பனை ஓலை பெட்டிகள் கன்னி பெட்டிகள் என்றழைக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
ஆடி மாதம் கன்னி வழிபாட்டுக்காக திருச்செந்தூா் பகுதியில் உள்ள கடைகளில் கன்னி பெட்டிகள் அதிகளவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கி செல்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.