பிரபல ரௌடி கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரௌடியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.
பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரௌடியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி, டி.வி.கே. நகா், 3-வது மைலை சோ்ந்த இசக்கிராஜன் என்ற வேலுசாமி மகன் காளியப்பன் என்ற காடை காளியப்பன் (33). இவா் மீது ஆறுமுகனேரி, தூத்துக்குடி தெற்கு, புதுக்கோட்டை, பாளையம்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 2 கொலை, 7 கொலை முயற்சி அடிதடி உள்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
இவா் வழக்குகளில் ஆஜராகாததால் இவருக்கு எதிராக நீதிமன்ரம் பிடிவாரன்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் ரென்னீஸ் தலைமையில் போலீஸாா், காடை காளியப்பனை ஆறுமுகனேரி, ராஜாமணியபுரம் பகுதியில் கைதுசெய்தனா். பின்னா், தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.