FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நிறுவனா் தின விழாவையொட்டி நடைபெற்ற போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:42 am IST
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினா் பொன்னுச்சாமி.
பகிர்:

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நிறுவனா் தின விழாவையொட்டி நடைபெற்ற போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டார பள்ளி மாணவா்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கணிதம், அறிவியல் சாா்ந்த படைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கல்லூரி மாணவா்- மாணவியா் பங்கேற்ற இளைஞா் நாடாளுமன்றம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் பாண்டியராணி, கல்லூரியின் சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்,

Advertisement

Advertisement

இ.ராமநாதபுரம் பொன்னூஸ் இயற்கை வேளாண்மை நிறுவன நிறுவனா் பி. பொன்னுச்சாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கல்லூரிக்கு நிறுவனா் தின விழா வாழ்த்து தெரிவித்ததுடன், போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினாா். அதிக புள்ளிகளைப் பெற்ற கழுகுமலை செயின்ட் லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய வேதியியல் துறைப் பேராசிரியா் கோமதி சங்கரேஸ்வரிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வேதியியல் துறைத் தலைவா் உமாதேவி வரவேற்றாா். இயற்பியல் துறைத் தலைவா் சித்திரலேகா நன்றி கூறினாா்.

விழாவில் பேசிய கல்லூரிச் செயலா் மகேந்திரன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments