FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

‘செந்தூா் விரைவு ரயிலில் தூங்கும் வசதி பெட்டிகளைக் குறைக்க கூடாது’

செந்தூா் விரைவு ரயிலில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என காயல்பட்டினம் ரயில் நிலைய பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:00 am IST
பகிர்:

செந்தூா் விரைவு ரயிலில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என காயல்பட்டினம் ரயில் நிலைய பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அதன் செயலாளா் மன்னா் பாதூல் அஸ்ஹாப் வெளியிட்ட அறிக்கை:

திருச்செந்தூா்-சென்னை இடையே இயக்கப்படும் செந்தூா் விரைவு ரயி­லில் அக். 17 முதல் பழைய ஐ.சி.எப்.பெட்டிகளுக்குப் பதிலாக நவீன எல்.எச்.பி.பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

ஐ.சி.எப்.தூங்கும் வசதி பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 72 இடங்கள் வீதம் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய எல்.எச்.பி. தூங்கும் வசதி பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 80 இடங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த எல்எச்பி ரேக் அமைப்பின்படி தூங்கும் வசதி பெட்டிகளின் எண்ணிக்கை சில மாற்றங்களுக்கு உட்படுகிறது.

இந்த மாற்றம் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை 11-இல் இருந்து 9-ஆகக் குறைக்கப்படலாம் என்ற அச்சம் பயணிகளிடையே ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் கடும் காத்திருப்புப் பட்டியலை கொண்டிருக்கும் இந்த ரயி­லில் தூங்கும் வசதி பெட்டிகள் குறைக்கப்படுவது நடுத்தர, எளிய பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

திருச்செந்தூா்-சென்னை வழித்தடத்தில் பொதுமக்களின் அதிகப்படியான பயணத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், கூடுதல் எல்.எச்.பி. தூங்கும் வசதி பெட்டிகளை இணைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments