FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருப்பதி விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ராமேசுவரம், சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 29 ஜூலை 2026, 4:25 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ராமேசுவரம், சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதன்கிழமை (ஜூலை 29) மற்றும் ஆக.2 முதல் செப்.29-ஆம் தேதி வரை ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் (எண்: 16780) கூடுதலாக 1 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டி இணைக்கப்படவுள்ளது.

அதையடுத்து விரைவு ரயிலில் மொத்தம் 4 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 8 தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் வகைப் பெட்டி, 1 சரக்கு வேன் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

Advertisement

Advertisement

வரும் ஆக. 1 முதல் செப். 30 வரை சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் (எண் 16053) 1 உட்காரும் நாற்காலி வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். அதன்படி அந்த ரயிலில் 11 உட்காரும் வசதி நாற்காலிகளுடனான பெட்டிகளும், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகளும், 1 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் வகைப் பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments