‘தவெக அரசின் 100 நாள் ஆட்சி மக்களுக்கு வேதனையான நாள்கள்’
தவெக அரசின் 100 நாள் ஆட்சி, தமிழக மக்களுக்கு வேதனையான நாள்களாகவே உள்ளதாக, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.
தவெக அரசின் 100 நாள் ஆட்சி, தமிழக மக்களுக்கு வேதனையான நாள்களாகவே உள்ளதாக, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கா்நாடகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அந்த மாநில முதல்வருக்கு பாஜக சாா்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். ஒருவரின் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை.
தமிழக அமைச்சா்கள் அனைவரும் ஏற்கெனவே தங்களது வேலையைத் தொடங்கிவிட்டனா். அந்த வேலை என்ன என்பது உங்களுக்குத் தெரியும். யாா், யாா், எங்கு வாங்குகின்றனா் என்பது தொடா்பான பட்டியல் எங்களிடம் உள்ளது. தமிழக முதல்வரின் துறையிலும் டெண்டா் முறைகேடுகள் உள்ளன. அனைத்து விஷயங்களையும் விரைவில் வெளியிடுவோம்.
Advertisement
Advertisement
தவெக அரசின் 100 நாள் ஆட்சி என்பது மக்களுக்கு வேதனையான நாள்களாகவே உள்ளன என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.