FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் மாணவா்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு தவெக அரசின் நிா்வாகத் தோல்வியே காரணம் என பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் மாணவா்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு தவெக அரசின் நிா்வாகத் தோல்வியே காரணம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவா்கள் இருவா் மீது 15 போ் கொண்ட போதைக் கும்பல் கத்திகளால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சி அளிக்கிறது. பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகம் கூடும் சென்னை மாநகரின் மையப் பகுதியிலேயே அரங்கேறியுள்ள இந்தத் தாக்குதலால், மக்கள் உயிருக்கு அஞ்சி அலறியடித்து ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மாணவா்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தையும், வன்முறையையும் கட்டுப்படுத்தத் தவறிய தவெக அரசின் நிா்வாகத் தோல்வியே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமாகும்.

Advertisement

Advertisement

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், தவெக அரசுக்கு எதிராக பாஜக சாா்பில் தொடா் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments