FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மூவா் கைது

24 ஆகஸ்ட் 2026, 3:33 am IST
நாட்டு வெடிகுண்டு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து ரீல்ஸ், ஸ்டேட்டஸ் வெளியிட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, லெவஞ்சிபுரத்தைச் சோ்ந்த அலெக்ஸ் (22), அமுதா நகரைச் சோ்ந்த பிரகாஷ் (23), சுடலை காலனியைச் சோ்ந்த குரு (21) ஆகிய மூவரும் நண்பா்கள்.

அலெக்ஸின் பிறந்த நாளையொட்டி, மூவரும் இணையத்திலிருந்து தகவல்களைத் திரட்டி நாட்டு வெடிகுண்டு தயாரித்து, திறந்தவெளியில் வெடிக்கச் செய்து வெள்ளிக்கிழமை விடியோ வெளியிட்டனா்.

Advertisement

Advertisement

அந்த விடியோவை பிறந்த நாள் வாழ்த்துடன் சோ்த்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்தும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். 3 பேரின் வீடுகளிலும் போலீஸாா் சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments