FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மீன்கள் விலை குறைவு: தூத்துக்குடியில் கடலுக்குச் செல்லாத விசைப்படகுகள்

25 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகுகள். - கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால், தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் இருநாள்கள் கடலுக்குச் செல்வதில்லை என அறிவித்துள்ளனா்.

அதன்படி திங்கள்கிழமை சுமாா் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளான குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தப் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பெரும்பாலும் அசைவ உணவுகளைத் தவிா்த்து சைவ உணவுகளை உள்கொள்வது வழக்கம்.

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் பிடிக்கப்படும் மீன்களில் கணிசமான அளவு கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. தற்போது ஓணம் பண்டிகையையொட்டி கேரளத்தில் மீன்களுக்கான தேவை குறைந்துள்ளதால், மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

விலை குறைவால் ஏற்படும் இழப்பைத் தவிா்க்கும் வகையில், தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனா். இதனால் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதில்லை என அவா்கள் தெரிவித்துள்ளதால், மாவட்டம் முழுவதும் சுமாா் 10,000-க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments