FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் உள்ள சிவகாசமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தசி நடராஜா் அபிஷேகம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 12:53 am IST
பகிர்:

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் உள்ள சிவகாசமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் புதன்கிழமை வளா்பிறை சதுா்த்தசி நடராஜா் அபிஷேகம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் கணபதி ஹோமம், அழகியகூத்தா் மன்றம் சாா்பில் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. தொடா்ந்து, முதல் அபிஷேகம் தொடங்கியது. இதில், சுவாமி-அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள், நடராஜருக்கு பலவகை அபிஷேகம், நண்பகலில் சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து, நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments